/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிங்காரப்பேட்டை அரசு பள்ளிமுன்னாள் மாணவர்கள் சந்திப்ப
/
சிங்காரப்பேட்டை அரசு பள்ளிமுன்னாள் மாணவர்கள் சந்திப்ப
சிங்காரப்பேட்டை அரசு பள்ளிமுன்னாள் மாணவர்கள் சந்திப்ப
சிங்காரப்பேட்டை அரசு பள்ளிமுன்னாள் மாணவர்கள் சந்திப்ப
ADDED : ஜன 17, 2025 12:57 AM
சிங்காரப்பேட்டை அரசு பள்ளிமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஊத்தங்கரை,: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், 1997 --- 99ம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் மற்றும் வகுப்பெடுத்த ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் வரதராஜூலு தலைமை வகித்தார். முன்னாள் ஆசிரியர்கள் நடராசன், பழனி, தலைமையாசிரியர் சிவராமன் ஆகியோர், தங்களிடம் படித்த மாணவ, மாணவியரை பாராட்டினர்.
நிகழ்வில், 25 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது ஆசிரியர்களையும், உடன் படித்த மாணவ, மாணவியரையும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் அனைவரும், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வு தங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்ததாக அனைவரும் கூறினர். முன்னாள் மாணவர்களில் பலர், அரசு உயர் பதவியிலும், தொழிலதிபராகவும் உள்ளனர். அனைவரும், தாங்கள் படித்த பள்ளிக்கு, நன்கொடைகளை வழங்கினர்.