ADDED : ஜன 17, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடு முட்டி வாலிபர் பலி
ஓசூர்: சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளியில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். விழாவில் பாய்ந்து வந்த ஒரு காளை வேடிக்கை பார்க்க வந்த, காளிங்கவரம் அடுத்த தொட்டேப்பள்ளியை சேர்ந்த திருமல்லேஷ், 25, என்ற வாலிபரை முட்டி தள்ளி விட்டு ஓடியது. படுகாயமடைந்த திருமல்லேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.