ADDED : ஜன 24, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை விபத்தில் வாலிபர் சாவு
கிருஷ்ணகிரி, : பர்கூர் அடுத்த மட்டாரப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன், 25, தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் கடந்த, 21ல், ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 9:45 மணியளவில், மகாராஜகடை அருகே வரட்டனப்பள்ளி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த சீனிவாசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

