ADDED : ஜன 31, 2025 01:12 AM
காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
கிருஷ்ணகிரி:-கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், காந்தி நினைவு நாளையொட்டி நேற்று, காங்., கட்சி முன்னாள் மாவட்ட தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் தலைமையில், காங்., கட்சியினர் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதி மொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில், காங்.,
வட்டார தலைவர் செல்வராஜ், அகில இந்திய, காங்., கட்சி முன்னாள் உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு தலைவர் முஸ்தபா, நகர துணைத் தலைவர் ஸ்ரீராம், மாவட்ட கலைப்பிரிவு துணைத் தலைவர் தேவேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஸ்ரீராமுலு, சரவணன், முன்னாள் இளைஞர், காங்., மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் கமலக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

