ADDED : பிப் 08, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில், காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், ரேஷன் அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று (8ம் தேதி) காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை வட்டத்திற்கு ஒரு கிராமம் என்ற அடிப்படையில், 8 கிராமங்களில் பொது வினியோக திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது. எனவே, குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்
பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.