தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாசாணியம்மன் கோவிலில்மயான கொள்ளை பூஜை

மாசாணியம்மன் கோவிலில்மயான கொள்ளை பூஜை

மாசாணியம்மன் கோவிலில்மயான கொள்ளை பூஜை


ADDED : பிப் 13, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:ஓசூர் அருகே, சமத்துவபுரத்திலுள்ள மாசாணியம்மன் கோவிலில், 8ம் ஆண்டு மயான பூஜை, குண்டம் திருவிழா மற்றும் அலகு குத்தும் விழா கடந்த மாதம், 29ல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மேல், மயான கொள்ளை பூஜை நடந்தது. கோவில் அருகே களிமண்ணால் செய்த மாசாணியம்மன் சிலை முன், பூசாரி பாண்டியன் அருள் வந்து ஆடினார்.

அப்போது, சுடுகாட்டிலிருந்து எடுத்து வந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி, அருள்வாக்கு கூறினார். மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலையை சுற்றி வந்து, ஒருகட்டத்தில் சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தார். அதன் பின்னர், சிலையின் மேலிருந்த எலுமிச்சை பழம், மஞ்சள் கயிறுகள், மண் உள்ளிட்ட பொருள்களை பக்தர்கள் பிரசாதமாக வீட்டிற்கு எடுத்து சென்றனர். பேய், பிணி, பீடைகள் விலகவும், நோய்களிலிருந்து தங்களை காக்கவும், பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கினர். ஓசூர் பக்தர்கள் மட்டுமின்றி,

கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us