/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கம்பம்பள்ளி அரசு பள்ளியில்'போக்சோ' விழிப்புணர்வு
/
கம்பம்பள்ளி அரசு பள்ளியில்'போக்சோ' விழிப்புணர்வு
ADDED : பிப் 14, 2025 01:09 AM
கம்பம்பள்ளி அரசு பள்ளியில்'போக்சோ' விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி, :கம்பம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் வினாடி வினா நிகழ்ச்சியில், போக்சோ சட்டம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த கம்பம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் திருவரசு, பி.டி.ஏ., தலைவர் மோகன்ராம் தலைமை வகித்தனர். மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் சுதாகர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பள்ளியில், 6 முதல், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இருவர், இருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, 5 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
அவர்களிடம் அறிவியல், சமூகம், சட்டம், பொது அறிவு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் தெரியாத பட்சத்தில் பங்கேற்பாளராக கலந்து கொண்ட மாணவ, மாணவியரிடமும் பதில்கள் பெறப்பட்டன. தொடர்ந்து போக்சோ சட்டம் குறித்தும், மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளும் வகையில் கேள்விகள் கேட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அதிகாரிகள் பேசினர்.
அறிவியல் ஆசிரியர்கள் விஜய், அருள்ராஜ், மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

