/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முன்னாள் முப்படை வீரர்கள்நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
முன்னாள் முப்படை வீரர்கள்நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் முப்படை வீரர்கள்நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் முப்படை வீரர்கள்நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 21, 2025 01:12 AM
முன்னாள் முப்படை வீரர்கள்நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி முன்னாள் ராணுவ வீரர்கள் நலஅலுவலகம் முன்பு, முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள், வீராங்கனைகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய குழுவை தனியாக அமைக்க வேண்டும். பி.எம்.ஆர்., என்ற நிபந்தனையை அகற்ற வேண்டும். குடும்ப ஓய்வூதியம் புதிய அடிப்படையில் வழங்க வேண்டும். ஓய்வூதிய கணக்கீடு முறை, ராணுவ தளபதியின் ஓய்வூதியத்தில், சிப்பாய் முதல், சாதாரண கேப்டன் வரை நிர்ணயம் செய்ய வேண்டும். சாதாரண நாயக், சுபேதார், சுபேதார் மேஜர், கேப்டன் ஆகியோருக்கு முறைப்படுத்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செயலாளர் திருப்பதி, பொருளாளர் சென்றாயன், துணைத்தலைவர் தேவராஜன், துணை செயலாளர் காளியப்பன், துணை பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட தலைவர் சேகர் நன்றி கூறினார்.