ADDED : பிப் 23, 2025 01:26 AM
தி.மு.க., மருத்துவ அணி கூட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தளி சாலையிலுள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில், வேலுார் மண்டல, தி.மு.க., மருத்துவ அணி சார்பில், சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் பூபேஷ் கார்த்திக் வரவேற்றார்.
மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்., சோமு எம்.பி., மற்றும் செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் ராஜேஸ்வரி மோகன்காந்தி, எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் பேசினர். ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட அவைத்
தலைவர் யுவராஜ், பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சுகுமாறன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர். மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.