/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் தி.மு.க., மாநகர செயற்குழு
/
ஓசூர் தி.மு.க., மாநகர செயற்குழு
ADDED : பிப் 26, 2025 01:21 AM
ஓசூர் தி.மு.க., மாநகர செயற்குழு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தி.மு.க., மாநகர செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிக்குமார், தியாகராஜ், துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் மேயர் சத்யா பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், வரும் மார்ச், 9ம் தேதி காலை, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் ரத்ததான முகாம், மாலையில் முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்த
வேண்டும். முதல்வர் பிறந்த நாளில், அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். வார்டு செயலாளர் ஜான் நன்றி கூறினார்.