தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்

மாணவி உட்பட இருவர் மாயம்


ADDED : பிப் 27, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவி உட்பட இருவர் மாயம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ரகமத் நகரை சேர்ந்தவர் அம்ரூல் நாதப் மகள் அஸ்மத் காதுான், 19. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 22 மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், தன் மகள் பணியாற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தோலாஜி, 27, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

உத்தனப்பள்ளி அருகே, தேன்துர்க்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவப்பா மகள் சுப்ரியா, 20. ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 24 இரவு, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரில், தேன்துர்க்கத்தை சேர்ந்த நவீன்குமார், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us