/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பூங்காவனத்தம்மன் கோவில் ரத உற்சவம்
/
பூங்காவனத்தம்மன் கோவில் ரத உற்சவம்
ADDED : பிப் 28, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூங்காவனத்தம்மன் கோவில் ரத உற்சவம்
போச்சம்பள்ளி:மத்துார் அடுத்த, சிவம்பட்டியிலுள்ள பூங்காவனத்தம்மன் கோவிலில் கடந்த, 21ல் இருந்து அம்மன் திருவிழா நடந்து வருகிறது. நேற்று அமாவாசையையொட்டி மயானக்கொள்ளை சூறையாடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மயானக்கொள்ளையில் தானியங்கள் சுண்டல் மற்றும் எலுமிச்சை, பூக்களை படையல் வைத்து பக்தர்கள் பூஜை செய்தனர். இதை பக்தர்கள் மடியில் ஏந்தி பெற்றுக்கொண்டனர். இன்றிரவு வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளத்துடன் பிள்ளையார், பூங்காவனத்தம்மன் ரத உற்சவம் நடக்க உள்ளது.

