ADDED : மார் 03, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருது விடும் விழா நிறுத்தம்
ஓசூர்: ஓசூர் அடுத்த தேவீரப்பள்ளியில் நேற்று எருதுவிடும் விழாவிற்கு அப்பகுதியினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை. இந்நிலையில் எருதுவிடும் விழாவிற்கு அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும், 100க்கணக்கான காளைகள் அழைத்து வரப்பட்டன. ஆனால் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்த, பாகலுார் போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, எருதுவிடும் விழா நிறுத்தப்பட்டது.