/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்
/
பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்
ADDED : மார் 04, 2025 01:33 AM
பள்ளி மாணவர்களுக்குஆதார் சிறப்பு முகாம்
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஆதார் சிறப்பு முகாம் மத்துார் அரசு துவக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் படி, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா முன்னிலையில் நடந்த இந்த ஆதார் முகாமில், பள்ளி மாணவர்களின் கருவிழி, ரேகை பதிவு மற்றும் ஆதாரில் பெயர், மொபைல் நெம்பர் திருத்தம் மற்றும் ஓ.பி.சி., சான்று உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்கி, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறும் வகையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முகாமில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், இந்த ஆதார் சேவையை பயன்படுத்தி கொண்டனர்.