/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரதராய சுவாமி கோவில்தேரோட்ட திருவிழா
/
வரதராய சுவாமி கோவில்தேரோட்ட திருவிழா
ADDED : மார் 10, 2025 01:24 AM
வரதராய சுவாமி கோவில்தேரோட்ட திருவிழா
தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டை அருகே, அன்னியாளம் கிராமத்திலுள்ள வரதராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த, 7ல் துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரித்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராய சுவாமி உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு, பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னியாளம், சீர்திம்மனட்டி, வரதரெட்டிபாளையம், நாகிரெட்டிபாளையம், தேவர் உளிமங்கலம், கோட்டை உளிமங்கலம், கக்கதசாம் சுற்றுப்புற கிராம பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.