ADDED : மார் 10, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமான தார்ச்சாலை
ஊத்தங்கரைஊத்தங்கரை அடுத்த, கொண்டம்பட்டியில் இருந்து, பாம்பாறு அணை மேம்பாலம் வரை செல்லும் தார்ச்சாலை சேதமாகி குண் டும், குழியுமாக உள்ளது.
இச்சாலையை தின மும் மாணவர்களும், பொது மக்களும், பணிக்கு செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். சாலை சேதமாகி உள்ளதால், இரவில் பயணிப்பது மிக சவாலாக இருப்பதாகவும், அடிக்கடி டூவீலர்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருவதாகவும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில், சேதமான தார்ச்சாலையை புதுப்பிக்க கோரிக்கை எழுந்துள்ளது.