ADDED : மார் 13, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமி உட்பட இருவர் மாயம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே கடூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் மனைவி கனகா, 27. கணவருடன் அனுசோனை கிராமத்தில் தங்கி, பென்னங்கூரில் உள்ள தனியார் கார்மென்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த, 8 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
கெலமங்கலத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. கூலித்தொழிலாளி. கடந்த, 9 மதியம், 3:40 மணிக்கு வீட்டிலிருந்து சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. அவரது தாய் கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலம் மேல் தெருவை சேர்ந்த சுனில்குமார், 20, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து, கெலமங்கலம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.