/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 02:05 AM
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு சத்துணவு மற்றும்
அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதம், 2,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இப்பணம் உணவு, மருந்து, வீட்டு தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே, தேர்தல் வாக்குறுதிபடி வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதியாக, 25,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெர்னத், மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விண்ணிலா, முன்னாள் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.