/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக பட்ஜெட்டுக்கு தொழில்முனைவோர் வரவேற்பு
/
தமிழக பட்ஜெட்டுக்கு தொழில்முனைவோர் வரவேற்பு
ADDED : மார் 15, 2025 02:05 AM
தமிழக பட்ஜெட்டுக்கு தொழில்முனைவோர் வரவேற்பு
ஓசூர்:ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) தலைவர், எஸ்.மூர்த்தி: தமிழக அரசின் பட்ஜெட்டில் ஓசூரில், 400 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 2.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில், 9 இடங்களில், 398 ஏக்கரில், 366 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். ஓசூரை ஒட்டி, அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும். 225 கோடி ரூபாய் ஒதுக்கி, 1 லட்சம் பெண்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் திட்டம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. இதன் மூலம், ஓசூர் பகுதியில் தொழில் வளர்ச்சி மேலும் பெருகும்.
சிறு, குறுந்தொழில் தொழில்முனைவோர், கே.வேல்முருகன்: கர்நாடகா மாநிலத்தை ஒட்டியுள்ள, ஓசூரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு டைடல் பார்க் தேவை என, பல ஆண்டுகளாக கேட்டு வந்தோம். அதை இந்த பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது.
ஓசூரில், 5 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால், ஓசூர் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும். ஒரு லட்சம் பேருக்கு நேரடி நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். உற்பத்தி துறையில் ஏற்கனவே ஓசூர் முன்னணியில் உள்ளது. இந்த அறிவிப்பால் மென்பொருள் துறையிலும் முக்கிய இடத்தை பெறும். அறிவுசார் பெருவழித்தட அறிவிப்பால், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள், ராணுவ தளவடா ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவை வருவதற்கு உதவியாக இருக்கும்.