/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இளைஞர்களை விவசாயத்தில் ஈர்க்க திறன் பயிற்சி
/
இளைஞர்களை விவசாயத்தில் ஈர்க்க திறன் பயிற்சி
ADDED : மார் 19, 2025 01:35 AM
இளைஞர்களை விவசாயத்தில் ஈர்க்க திறன் பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி:--ப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணம்பட்டி ஊராட்சி வரதகவுண்டனுாரில், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், கிராம புற இளைஞர்களை விவசாயத்தில் ஈர்க்கும் திட்டத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
இதை வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியரும் தோட்டக்கலை விஞ்ஞானி இந்துமதி தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார். இதில், வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள், மாதிரி திடல்கள், புதிய தொழில்நுட்ப முறைகள், அதை மக்கள் பயன்படுத்தும் விதம் குறித்து பேசினார்.
கால்நடை அறிவியல் விஞ்ஞானி தங்கதுரை பேசுகையில், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையகம் எனும் தலைப்பில் பேசினார். புதுமையான தொழிலை விவசாயத்தில் ஈடுபடுத்தி அதிக லாபம் பெற உள்ள புதிய தொழில்நுட்பங்கள், கால்நடைகளை நோய் கட்டுப்படுத்தும் முறைகள், தடுப்பூசி, குடற்புழு நீக்கும், தாது உப்பு சேர்த்து உதவியவற்றை செய்முறை பயிற்சி அளிக்கப்
பட்டது.பயிற்சியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தை சேர்ந்த முகமது ரஹீம், அன்பரசன் அன்னலட்சுமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த, ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.