/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரட்டாறு தடுப்பணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
/
வரட்டாறு தடுப்பணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
வரட்டாறு தடுப்பணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
வரட்டாறு தடுப்பணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : மார் 20, 2025 01:28 AM
வரட்டாறு தடுப்பணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
அரூர்:வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. தடுப்பணையின் மொத்த கொள்ளளவு, 34.45 அடி. கடந்தாண்டு, அக்., 19ல் தடுப்பணை நிரம்பியது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று தடுப்பணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் சதீஷ் தலைமை வகித்து தடுப்பணை மதகின் ஷட்டரை பிடித்து, தண்ணீரை திறந்து வைத்தார். அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தடுப்பணையில் இருந்து, 40 நாட்களுக்கு, 30 கன அடி என, தண்ணீர் திறந்து விடப்படும். 25 ஏரிகள் மூலம், வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, புதூர் ஆகிய, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறும்.