/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
/
சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
ADDED : மார் 27, 2025 01:23 AM
சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டியில், தி.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையில் நடந்தது.
தமிழக மஸ்ஜித்களின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு மாநில துணை செயலாளர் எக்பால் முன்னிலை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நியாஸ் வரவேற்றார். தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, வி.சி., நிர்வாகி நந்தன், மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, ஒன்றிய செயலாளர் நெப்போலியன், பேரூராட்சி தலைவர் மாரி, முல்லை முருகன் உள்ளிட்ட, தி.மு.க., கூட்டணி கட்சியினர் அசோகன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் அஸ்லாம் நன்றி கூறினார்.