/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அகற்றிய உயர்மின் கோபுரம்மீண்டும் அமைக்க கோரிக்கை
/
அகற்றிய உயர்மின் கோபுரம்மீண்டும் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 27, 2025 01:26 AM
அகற்றிய உயர்மின் கோபுரம்மீண்டும் அமைக்க கோரிக்கை
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, தர்மபுரி - ஓசூர் நெடுஞ்சாலையில், வெள்ளிசந்தை ரவுண்டானாவில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
கடந்த ஓராண்டிற்கு முன், சாலை விரிவாக்க பணியின்போது, அதிகாரிகள் உயர்மின் கோபுர விளக்கை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மீண்டும் அங்கு அமைக்கப்படாததால் ஏற்படும் பாதிப்பு குறித்து, பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், பஞ்., நிர்வாகம் தான், அதை சரிசெய்ய
வேண்டுமென கூறினர்.இந்நிலையில், பிக்கனஹள்ளி பஞ்., நிர்வாகம் கோரிக்கையை கிடப்பில் போட்டதால், நெடுஞ்சாலையிலுள்ள வெள்ளிசந்தை ரவுண்டானா பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன விபத்து, திருட்டு சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது.
இதில், ரவுண்டானாவில் இருந்து அப்புறப்படுத்தபட்ட உயர்மின் கோபுரம், சாலையோரம் குப்பை போல் வீசப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, அப்புறப்படுத்தபட்ட உயர்மின் கோபுர விளக்கை, மீண்டும் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது.