/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
/
தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
ADDED : மார் 30, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி., ரோட்டில் காந்தி சிலை அருகே உள்ள மசூதியில், மாநகர தி.மு.க., சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசினார். ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தினர் பங்கேற்று நோன்பு திறக்கப்பட்டது. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமார், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, கவுன்சிலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.