/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீ ஹிமாலயா ஓட்டல் திறப்பு விழா
/
ஸ்ரீ ஹிமாலயா ஓட்டல் திறப்பு விழா
ADDED : ஏப் 01, 2025 01:30 AM
ஸ்ரீ ஹிமாலயா ஓட்டல் திறப்பு விழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில், ஸ்ரீ ஹிமாலயா ஓட்டல் திறப்பு விழா நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி அடுத்த குருபரப்பள்ளி டெல்டா சர்வீஸ் சாலை, ஆராதனா பேக்கரி அருகே புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஹிமாலயா மல்டி குஷன் ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், 'டிவி' நட்சத்திரம் பாலா, ஓட்டலை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
ஓட்டல் உரிமையாளரான கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அடுத்த துவாரகாபுரியை சேர்ந்த சதீஷ் பொன்னுசாமி தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, டெல்டா கம்பெனி அருகே, எங்களது புதிய ஓட்டல் துவங்கப்பட்டுள்ளது.
சைவம், அசைவம் வகைகளை சேர்ந்த, 120க்கும் மேற்பட்ட வகை உணவுகள், குறைந்த விலையில், தரமாக கொடுக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் ஓட்டலை துவக்கி உள்ளோம். விசேஷ நாட்களில் ஓட்டல்களில் சிறப்பு ஆபர்களும் வழங்க உள்ளோம். எங்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
விழாவில், ஓட்டல் உரிமையாளர் சதீஷின் பெற்றோர், உறவினர், ஓட்டல் பணியாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.