/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
அரசு மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 04, 2025 01:17 AM
அரசு மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 16வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி, இளநிலை பாடப்பரிவில் 2021- 24 மற்றும் முதுநிலை பாடப்பிரிவில், 2022- 24ம் கல்வியாண்டில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறையில் பயின்று பட்டம் பெற தகுதியுடைய மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இதில், வணிக நிறும செயலாண்மை துறை மாணவி முத்துலட்சுமி, பெரியார் பல்கலைக்கழகம் அளவில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், 5 மாணவியர் பெரியார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்த்துறையில், 4 மாணவியர் முனைவர் பட்டம் பெற்றனர். அனைத்து துறைகளை சேர்ந்த, 659 மாணவியர் இளங்கலை பட்டமும், 116 மாணவியர் முதுகலை பட்டம் என, இக்கல்லுாரியில் பயின்ற, 779 மாணவியருக்கு நேற்று பட்டம் வழங்கப்பட்டது.
அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.