/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீ வெங்கடரமண சுவாமிகோவில் தேர் திருவிழா
/
ஸ்ரீ வெங்கடரமண சுவாமிகோவில் தேர் திருவிழா
ADDED : ஏப் 04, 2025 01:20 AM
ஸ்ரீ வெங்கடரமண சுவாமிகோவில் தேர் திருவிழா
ஓசூர்:சூளகிரி அடுத்த தாசனபுரம் லட்சுமி வெங்கடரமணசுவாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தாசனபுரத்தில், 900 ஆண்டுகள் பழமையான அலமேலு மங்கை சமேத லஷ்மி வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அர்ச்சகர்கள் வெங்கடேஷ், நாராயணப்பா ஆகியோர் பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தனர்.
சூளகிரி முன்னாள் சேர்மேன்கள் ஹேம்நாத், லாவண்யா தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், ஆகியோர் தேர் வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி கோஷம் எழுப்பி தேரை இழுத்து வழிபட்டனர். முன்னாள் கவுன்சிலர்கள் நாகேஷ், கிருஷ்ணமூர்த்தி, மாதேஷ், கிருஷ்ணர் அசோசியேஷன் தலைவர் சம்பங்கி, முன்னாள் பஞ்., துணைத்தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 5 நாட்கள் நடக்கும் தேர் திருவிழாவில் பல்வேறு பூஜை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவின் நிறைவு நாளான ஏப்., 6ல் எருதுவிடும் விழா நடக்கிறது.

