/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முன்னாள் சீருடை பணியாளர்கள்நலச்சங்க ஆலோசனை கூட்டம்
/
முன்னாள் சீருடை பணியாளர்கள்நலச்சங்க ஆலோசனை கூட்டம்
முன்னாள் சீருடை பணியாளர்கள்நலச்சங்க ஆலோசனை கூட்டம்
முன்னாள் சீருடை பணியாளர்கள்நலச்சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 06, 2025 01:02 AM
முன்னாள் சீருடை பணியாளர்கள்நலச்சங்க ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளியில் முன்னாள் சீருடை பணியாளர்கள் நலச்சங்கம் கூட்டம் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்து, சங்க வளர்ச்சி குறித்து பேசினார். புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் ராஜமணி, தவமணி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சங்க செயலாளர் ராஜகோபால் பிறந்தநாளை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு, கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது. பொருளாளர் மாரப்பன், சங்கத்தின் வரவு மற்றும் செலவு கணக்கை சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் விளக்கினார். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.