/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் ஆண்டு விழா
/
மாநகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் ஆண்டு விழா
ADDED : ஏப் 06, 2025 01:03 AM
மாநகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் ஆண்டு விழா
ஓசூர்:ஓசூர், காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (தமிழ், ஆங்கில வழி) ஆண்டு விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார், அன்னையா, ராஜூ, பயாஸ் தலைமை வகித்தனர். தலைமையாசிரியை பத்மாவதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை சுகுணா வரவேற்றார். மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர், பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், நாடகம், பேச்சுப்போட்டிகள் நடந்தன. பள்ளி வளாகத்தில் இன்னும், 3 மாதத்தில் தன் சொந்த செலவில் பேவர் பிளாக் தளம் அமைத்து தருவதாக, மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷூம், நுாலகம் அமைத்து தருவதாக, மேயர் சத்யாவும் உறுதியளித்தனர். கவுன்சிலர்கள் இந்திராணி, தேவி மாதேஷ், மோசின்தாஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமரவேல், பள்ளி ஆசிரிய பயிற்றுனர் பசவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை கண்மணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை, பள்ளி மேலாண்மை தலைவி மாலினி, உறுப்பினர் சாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கோனேரிப்பள்ளியில்
சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார மைய அலுவலர்கள் மாதேஷ், ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டுவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும் கல்வியில் சிறந்து விளங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் நடப்பாண்டில் அரசு துவக்க பள்ளியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் தேவி, நவநித்யா, முனிலட்சுமி, மாணவ மாணவியர், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.