/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்தொல்லியல் மரபு பயணம்
/
அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்தொல்லியல் மரபு பயணம்
ADDED : ஏப் 08, 2025 01:54 AM
அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்தொல்லியல் மரபு பயணம்
கிருஷ்ணகிரி:தமிழகத்தில், தொல்லியல் மரபு நடை சார்ந்த பணிகள் மேற்கொள்ள, 110 அரசுப்பள்ளிகளில் தொல்லியல் மரபு மன்றங்கள் துவங்கப்பட்டு, பள்ளிக்கு தலா, 10,000 ரூபாய் வீதம் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிங்காரப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, 4 பள்ளிகளில் தொல்லியல் மரபு மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 210 மாணவ, மாணவியர், 40 ஆசிரியர்கள், தொல்லியல் மரபு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் முதல் கட்டமாக, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். பின்னர் சென்னானுார் அகழாய்வு தளத்தை
பார்வையிட்டனர். பின்னர், கந்திகுப்பம் காலபைரவர் கோவில் கட்டடக்கலையை கண்டுகளித்தனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஸ்ரீதர், அசோக் ரெட்டி, பள்ளி தலைமை ஆசிரியர் நர்மதா தேவி, ஆசிரியர் சொர்ணா, தொல்லியல் அலுவலர் வெங்கட குரு பிரசன்னா உள்பட பலர் பங்கேற்றனர். களப்பயணத்தை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் ஒருங்கிணைத்தார்.

