/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பூஜையோடு நின்றரேஷன் கடை கட்டும் பணி
/
பூஜையோடு நின்றரேஷன் கடை கட்டும் பணி
ADDED : ஏப் 08, 2025 01:57 AM
பூஜையோடு நின்றரேஷன் கடை கட்டும் பணி
பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சியில், 15 கிராமங்கள் உள்ளன.
இதில், 10,000 துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு துறிஞ்சிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், ஐந்து முழு நேர ரேஷன் கடைகளும், இரண்டு பகுதி நேர கடைகளும் உள்ளன. அண்ணா நகர், இந்திரா காலனி, ஜெயந்தி காலனி, இஸ்லாமிய தெருவில், 900 ரேஷன் கார்டுகள் உள்ளன.
இப்பகுதியினர் பொம்மிடி ரோட்டில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குகின்றனர். அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து துரிஞ்சிப்பட்டி மாரியம்மன் கோவில் முன், இப்பகுதி மக்களுக்கு புதிய ரேஷன் கடை கட்ட தீர்மானிக்கப்பட்டு, 17 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு மாதத்திற்கு முன் பூமி பூஜை போடப்பட்டது.
இதுவரை அப்பணி தொடங்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து அப்பகுதியினர் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் அவல நிலை தொடர்கிறது.
அவ்வாறு செல்லும் மக்கள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. விரைந்து புதிய ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர்
வலியுறுத்தி உள்ளனர்.

