/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி
/
குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி
குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி
குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி
ADDED : ஏப் 10, 2025 01:54 AM
குடிநீர் வினியோகம் நிறுத்தம்சாலை மறியலுக்கு முயற்சி
போச்சம்பள்ளி:காவேரிப்பட்டணம் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த, புலியூர் கிராமத்தில் முஸ்லிம் தெரு உள்ளது. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த, 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியிலுள்ள மக்கள் விவசாய கிணறுகளை தேடியும், தண்ணீரை விலைக்கு வாங்கியும் வந்தனர்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 10:00 மணிக்கு தர்மபுரி - திருப்பத்துார் சாலையில், காலிக்குடங்களுடன் மறியல் செய்ய முயற்சித்தனர்.
தகவலறிந்த காவேரிப்பட்டணம் மண்டல துணை பி.டி.ஓ., சிவசங்கரி அப்பகுதி மக்களிடம் குடிநீர் தேவையை உடனடியாக சரிசெய்து கொடுப்பதாக கூறியதையடுத்து, சாலை மறியல் முயற்சி கைவிடப்பட்டது. நேற்று மதியம், 2:00 மணிக்கு அப்பகுதியில் சேதமான குழாய்கள் சரிசெய்து குடிநீர் வழங்கப்பட்டது.