/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் கட்டுவதில் பிரச்னைபதற்றத்தால் போலீஸ் குவிப்பு
/
கோவில் கட்டுவதில் பிரச்னைபதற்றத்தால் போலீஸ் குவிப்பு
கோவில் கட்டுவதில் பிரச்னைபதற்றத்தால் போலீஸ் குவிப்பு
கோவில் கட்டுவதில் பிரச்னைபதற்றத்தால் போலீஸ் குவிப்பு
ADDED : ஏப் 11, 2025 01:26 AM
கோவில் கட்டுவதில் பிரச்னைபதற்றத்தால் போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி தாலுகா, சிக்க பூவத்தி பஞ்.,ல், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், குருதொட்டனுார், சிக்கபூவத்தி, பூவத்தி என, 3 கிராமங்களில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.
பூவத்தியில் கொல்லி மாரியம்மன், மண்டு மாரியம்மன் கோவில், 3.43 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், 3 சமூகத்தினர் மட்டுமே திருவிழா நடத்துவதாகவும், ஒரு சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அவர்கள் தனியாக கோவில் கட்ட அனுமதிக்கும் கோரிக்கையையும் மற்ற தரப்பினர் ஏற்கவில்லை. கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் உப்புக்குட்டையில், உழவர் பேரியக்க மாநில பொதுச்செயலாளர் வேலுமணி, கிருஷ்ணகிரி, பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமையில், 250க்கும் மேற்பட்டோர் கூடி பேசினர்.
இதில், பூவத்தி மண்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மைதானத்தில், தனி கோவில் கட்ட வேண்டும். கோவில் கட்ட, 14ல், பந்தகால் முகூர்த்தம் செய்ய முடிவெடுத்தனர்.
இதனால், உப்புக்குட்டை பகுதியில் ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, இன்ஸ்பெக்டர்கள் குலசேகரன், சரவணன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கோவில் பிரச்னையில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

