/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய கமிஷன் பரிந்துரையைஅமலாக்க விவசாயிகள் வலியுறுத்தல்'
/
விவசாய கமிஷன் பரிந்துரையைஅமலாக்க விவசாயிகள் வலியுறுத்தல்'
விவசாய கமிஷன் பரிந்துரையைஅமலாக்க விவசாயிகள் வலியுறுத்தல்'
விவசாய கமிஷன் பரிந்துரையைஅமலாக்க விவசாயிகள் வலியுறுத்தல்'
ADDED : ஏப் 11, 2025 01:27 AM
விவசாய கமிஷன் பரிந்துரையைஅமலாக்க விவசாயிகள் வலியுறுத்தல்'
ஈரோடு:தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், செயலர் நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன், தமிழ்நாடு கள் இயக்க மாநில அமைப்பாளர் இல.கதிரேசன், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் பேசினர்.
தமிழகம் பொருளாதாரத்தில், 2024-25ல், 9.69 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதேநேரம் வேளாண் துறை வளர்ச்சி, 0.15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்தின் பங்களிப்பு, 10 சதவீதமாகவே உள்ளது. விவசாய நாடான இந்தியாவில், 60 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர்.
இங்கிருந்து வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்து, அந்நிய செலாவணி ஈட்டுவதே இயற்கை நீதி. இதற்கு மாறாக இறக்குமதி செய்வது அவமானம். இந்திய அரசு அறிவித்தபடி, விவசாயிகளின் ஆண்டு வருவாயை இரட்டிப்பாக்கவில்லை. மாறாக குறைகிறது. சம்பள கமிஷன் பரிந்துரை போல, விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினால், வருவாய் உயரும்.
இவ்வாறு கூறினர்.