/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மீட்பு பணியில் உயிர் நீத்தவீரர்களுக்கு நினைவஞ்சலி
/
மீட்பு பணியில் உயிர் நீத்தவீரர்களுக்கு நினைவஞ்சலி
ADDED : ஏப் 15, 2025 01:54 AM
மீட்பு பணியில் உயிர் நீத்தவீரர்களுக்கு நினைவஞ்சலி
கிருஷ்ணகிரி:மீட்பு பணியில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில், நாடு முழுவதும், தீயணைப்பு துறை சார்பில், ஆண்டுதோறும் ஏப்., 14ம் முதல், 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடக்கிறது.
கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, தீயணைப்பு பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு
அஞ்சலி செலுத்தும் விதமாக, நீத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலையத்தில் அமைக்கப்பட்ட, நீத்தார் நினைவு நாள் நினைவு துாணுக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமையில், நிலைய அலுவலர் அந்தோணிசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஒரு வாரத்துக்கு தீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும் என, தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.