sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'பொன்முடிக்கு சேரும் பெருமைமுதல்வர் ஸ்டாலினையும் சேரும்'

'பொன்முடிக்கு சேரும் பெருமைமுதல்வர் ஸ்டாலினையும் சேரும்'

'பொன்முடிக்கு சேரும் பெருமைமுதல்வர் ஸ்டாலினையும் சேரும்'


ADDED : ஏப் 17, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 01:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:''பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம், முதல்வர் ஸ்டாலினையும் சேரும்,'' என, தமிழக, பா.ஜ., துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயம் திறப்பு தொடர்பான வழக்கில் ஆஜராக, நேற்று தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்திருக்கிறது. கூட்டணியில் யாருக்கு எதை தர வேண்டுமென, கூட்டணி தலைமை பொறுப்பை ஏற்றுள்ள, அ.தி.மு.க.,வை சார்ந்தது. அண்ணாமலை மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு செல்ல இருக்கிறார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து இருப்பதை சகிக்க முடியாத, தி.மு.க.,வை சார்ந்தவர்கள் விஷமத்தனமான பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர்.

பெண்கள் பொன்மொடியின் உருவ படத்திற்கு செருப்பு போட்டது தவறு. உயிர் இல்லாத படத்தை அடித்ததில் என்ன பிரயோஜனம். தமிழக பெண்கள், அமைச்சர் பொன்முடி மீது, கோபத்தோடு இருக்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சரவை, ஒரு கேடுகெட்ட அமைச்சரவை. பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம் முதல்வர் ஸ்டாலினையும் சேரும். வெறும் பொன்முடியை மட்டும் வெளியேற்றக்கூடாது. வரும், 2026ல் ஒட்டுமொத்த, தி.மு.க., மந்திரி சபையை துாக்கி எறிய வேண்டும். தேர்தலில், தி.மு.க.,விற்கு பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us