தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 12, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலகம் முன், பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் கவியரசன், மாநில துணைத்தலைவர் தினேஷ், மாநில செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். தணிக்கையாளர் ஜெய-சீலன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஏற்ற முடிவுகளை செயல்படுத்த வேண்டும். தொழுநோய் ஒழிப்பு திட்ட பணியி-டங்களை என்.எம்.எஸ்., மற்றும் டி.எச்.இ., பணியிடங்களை இல்லாமல் செய்யும் உள்நோக்கத்தோடு செயல்படுத்துவதை வன்மையாக கண்டிப்பது.

சுகாதார ஆய்வாளர் நிலை - 2, புதிய பணி நியமனத்தில் உரிய அக்கறை செலுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் பணிய-மைப்புக்கு எதிராகவும், அலட்சிய போக்குடனும் செயல்படும் பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தை வன்மையாக கண்-டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us