தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஏப் 03, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அருகே கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கங்கலேரி, அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இதில், பால்வாடிகா (1, 2, 3) மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 2, 3, 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

பால்வாடிகா வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் நேற்று வரை பெறப்பட்டது. தற்போது, 2, 3, 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க, வரும், 8ம் தேதி கடைசி நாள்.

விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ், முகவரி அல்லது இருப்பிடச்சான்று, விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, 2 புகைப்படங்கள், முந்தைய வகுப்பு தேர்ச்சி அறிக்கை, மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமான சான்றிதழ்கள், பெற்றோரின் பணியிட சான்று (ராணுவம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் இதர பணிகள்), மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் அதற்கான அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சரிபார்ப்புக்கு, இணைக்கப்பட்ட நகல்களின் அசல் ஆவணங்கள் நேரில் கொண்டு வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94451 93658, 94445 71831, 97949 79952 உள்ளிட்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us