/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரவுடியின் நன்னடத்தை பிணை ரத்து11 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு
/
ரவுடியின் நன்னடத்தை பிணை ரத்து11 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு
ரவுடியின் நன்னடத்தை பிணை ரத்து11 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு
ரவுடியின் நன்னடத்தை பிணை ரத்து11 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு
ADDED : ஜன 23, 2025 01:43 AM
ரவுடியின் நன்னடத்தை பிணை ரத்து11 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு
ஓசூர், :கெலமங்கலம் அருகே, தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிக்கு வழங்கப்பட்டிருந்த பிணை ரத்து செய்யப்பட்டு, அவரை, 11 மாதம் சிறையிலடைக்க, சப் கலெக்டர் பிரியங்கா உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 35. பொக்லைன் டிரைவர்; ரவுடியான இவர் மீது, கொலை, வழிப்பறி, அடிதடி என, கெலமங்கலம், சூளகிரி,
மத்திகிரி, உத்தனப்பள்ளி ஸ்டேஷன்களில் மொத்தம், 5 வழக்குகள் உள்ளன. இவரை கடந்தாண்டு டிச., 23ல், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா முன், கெலமங்கலம் போலீசார் ஆஜர்படுத்தினர். அவருக்கு ஓராண்டிற்கு நன்னடத்தை பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த காலத்திற்குள் முனிராஜ் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவர் மீது, சப் கலெக்டர் நேரடியாக விசாரணை நடத்தி, சிறையில் அடைப்பார் என்பது விதி. இந்நிலையில் கடந்த, 18ல், அடிதடி வழக்கு ஒன்றில், கெலமங்கலம் போலீசாரால் முனிராஜ் கைது செய்யப்பட்டு, ஓசூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரது நன்னடத்தை பிணை ரத்து செய்யப்பட்டது. மேலும், நேற்று முன்தினம் ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா முன் முனிராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் டிச., 23 வரை சிறையில் அடைக்க, சப் கலெக்டர் பிரியங்கா உத்தரவிட்டார். இதனால், முனிராஜை கைது செய்த போலீசார், தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.