தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி


ADDED : மார் 04, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத் தங்கரை அடுத்த, நல்லவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி, 25. விவசாயி. அதே பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அவரது உறவினர் சேட்டு என்பவரின் விவசாய நிலத்தில் வளர்த்து வந்த, 30 ஆடுகளை நேற்று முன்தினம் வழக்கம் போல் பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை வந்து பார்த்த போது, மர்ம விலங்கு கடித்து, 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலின்படி, காட் டேரி அரசு கால்நடை மருத்துவர் முருகன் வந்து பார்வை யிட்டு, நாய்கள் கடித்ததில் ஆடு கள் இறந்திருக்கலாம் என தெரிவித் தார். ஆடுகள் பலியானதற்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க, ரகுபதி கோரிக்‍கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us