/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 115 கனஅடியாக நீடிப்பு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 115 கனஅடியாக நீடிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 115 கனஅடியாக நீடிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 115 கனஅடியாக நீடிப்பு
ADDED : மார் 02, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து 115 கனஅடியாக நீடிப்பு
கிருஷ்ணகிரி:தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால், கெலவரப்பள்ளி அணையில் திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து,
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த, 26ல், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 93 கனஅடியாக இருந்த நிலையில், இரு நாட்களாக நீர்வரத்து வினாடிக்கு, 115 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வலது, இடதுபுறக்கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு, 177 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில் நீர்மட்டம், 50.45 அடியாக உள்ளது.