/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரு ஜோடி மாடுகள்ரூ.12 லட்சத்திற்கு விற்பனை
/
ஒரு ஜோடி மாடுகள்ரூ.12 லட்சத்திற்கு விற்பனை
ADDED : ஜன 31, 2025 01:15 AM
ஓசூர், :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த திம்மசந்திரம் அருகே பழமையான சப்ளம்மா தேவி கோவில் உள்ளது. கால்
நடைகளை காத்து, மக்களை நோய் நொடியின்றி காப்பாற்றும் தெய்வமாகவும், கிராம மக்களின் உள்ளூர் தேவதையாகவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
கடந்த, 27 ல் சப்ளம்மா கோவில் திருவிழா தொடங்கியது. இதன் முக்கிய அம்சமாக பல கோடி ரூபாய் அளவில் மாடுகள் விற்பனை நடக்கும். நேற்று விற்பனைக்காக உயரம் குறைந்த புங்கனுார் மாடுகள் முதல், பல்வேறு வகை நாட்டின மாடுகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா, கர்நாடகா
மாநிலங்களிலிருந்தும் நுாற்றுக்கணக்கான மாடுகள் அழைத்து வரப்பட்டன.இதில், 3 அடி உயரம் முதல், 7 அடி உயர மாடுகள் வரை கொண்டு வரப்பட்டன. இதில், அதிகபட்சமாக ஒரு ஜோடி மாடுகள், 12 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. மாடுகளின் வசதிக்காக, சப்ளம்மா தேவி கோவில் நிர்வாகம் சார்பில், பந்தல் அமைத்து, தீவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து, சப்ளம்மா தேவிக்கு பிற கிராமங்களை சேர்ந்த பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி தட்டை தலையில் ஏந்தி, ஊர்வலமாக வந்து
அம்மனை தரிசித்தனர்.