/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மதுபானம் கடத்திய 2 பேர் கைது
/
கர்நாடகா மதுபானம் கடத்திய 2 பேர் கைது
ADDED : பிப் 23, 2025 01:27 AM
கர்நாடகா மதுபானம் கடத்திய 2 பேர் கைது
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவ ட்டம், ராயக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார், ராயக்கோட்டை - கெலமங்கலம் சாலையில் உள்ள நல்லராலப்பள்ளி பிரிவு ரோடு அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஸ்பிளண்டர் புரோ பைக்கை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது, கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கில், கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், பைக்கில் வந்த தொட்டதிம்மனஹள்ளி அருகே முத்தம்பட்டியை சேர்ந்த முருகன், 35, அதே பகுதியை சேர்ந்த வடிவேல், 28, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.66 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,545 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.