/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'குரூப் -2, 2ஏ' பதவிகளுக்குமுதன்மை எழுத்து தேர்வு
/
'குரூப் -2, 2ஏ' பதவிகளுக்குமுதன்மை எழுத்து தேர்வு
ADDED : பிப் 09, 2025 01:07 AM
'குரூப் -2, 2ஏ' பதவிகளுக்குமுதன்மை எழுத்து தேர்வு
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 'குரூப் -2, 2ஏ' பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். 'குரூப் -2, 2ஏ' பதவிகளுக்கு காலை நடந்த தேர்விற்கு, 251 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 241 பேர் தேர்வு எழுதினர். 10 பேர் தேர்வு எழுத வரவில்லை. பிற்பகல், 2:30 மணி முதல், 5:30 மணி வரை நடந்த தேர்விற்கு, 251 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றில், 236 பேர் தேர்வு எழுதினர். 15 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. அதன்படி, மொத்தம் இத்தேர்வை, 477 பேர் எழுதினர்.
இத்தேர்வு மையத்தை கண்காணிக்க, ஒரு முதன்மை கண்காணிப்பாளர், ஒரு நடமாடும் அலகு, 2 வீடியோகிராபர்கள், ஒரு ஆயுதம் ஏந்திய காவலர் மற்றும் ஒரு தேர்வு மைய காவலர் நியமிக்கப் பட்டிருந்தனர். கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் உடனிருந்தனர்.

