/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் மெட்ரிக் பள்ளியில் 21-ம் ஆண்டு விளையாட்டு விழா
/
அதியமான் மெட்ரிக் பள்ளியில் 21-ம் ஆண்டு விளையாட்டு விழா
அதியமான் மெட்ரிக் பள்ளியில் 21-ம் ஆண்டு விளையாட்டு விழா
அதியமான் மெட்ரிக் பள்ளியில் 21-ம் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : பிப் 02, 2025 01:20 AM
அதியமான் மெட்ரிக் பள்ளியில் 21-ம் ஆண்டு விளையாட்டு விழா
ஊத்தங்கரை:ஊத்தங்கரை, அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 21வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியின் நிறைவு நாள் விழாவில், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் திருமால்முருகன் தலைமை வகித்து, ஒலிம்பிக் சுடர் பேரணியை துவக்கி வைத்தார். இதில் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஊத்தங்கரை ரவுண்டானாவில் தொடங்கிய ஒலிம்பிக் சுடர் பேரணி, பள்ளி வளாகம் வரை சென்றது. இதில், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா, நிர்வாக அலுவலர் கணபதிராமன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கலைமணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.