/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண், ஜல்லி கடத்திய3 லாரிகள் பறிமுதல்
/
மண், ஜல்லி கடத்திய3 லாரிகள் பறிமுதல்
ADDED : பிப் 19, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண், ஜல்லி கடத்திய3 லாரிகள் பறிமுதல்
ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே பென்டரஹள்ளி வி.ஏ.ஓ., முருகானந்தம், மஞ்சமேடு பகுதியிலும், தேன்கனிக்கோட்டை ஆர்.ஐ., சென்னம்மாள், அஞ்செட்டி சாலையிலும், கக்கதாசம் ஆர்.ஐ., பானுமதி, பாலதொட்டனப்பள்ளி பகுதியிலும் தனித்தனியாக வாகன சோதனை செய்தனர்.
அப்போது உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மண், ஜல்லி மற்றும் கற்கள் எடுத்து சென்றதாக, 3 லாரிகளை பறிமுதல் செய்து, தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.