/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல் குடிநீர் 3 நாட்களுக்கு 'கட்'
/
ஒகேனக்கல் குடிநீர் 3 நாட்களுக்கு 'கட்'
ADDED : மார் 13, 2025 01:56 AM
ஒகேனக்கல் குடிநீர் 3 நாட்களுக்கு 'கட்'
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர், மாநகராட்சி மற்றும் மத்திகிரி, ராயக்கோட்டை அருகே சாலை பணிகளின் போது, புதிதாக பதிக்கப்பட்ட ஒகேனக்கல் குழாய்களை, ஏற்கனவே குடிநீர் வழங்கும் குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால் வரும், 17 முதல், 19 வரை, 3 நாட்களுக்கு, ஓசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் டவுன் பஞ்.,க்கள், கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 22 பஞ்.,க்கள் மற்றும் தளி ஒன்றியத்தில், 50 பஞ்.,க்கள், ஓசூர் ஒன்றியத்தில், 26 பஞ்.,க்கள், சூளகிரி ஒன்றியத்தில், 42 பஞ்.,க்கள், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், 27 பஞ்.,க்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே, 3 நாட்களும் உள்ளூர் நீர் ஆதாரங்களை பொதுமக்கள் பயன் படுத்தி கொள்ளவும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.