/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்ஓசூரில் 35 பேர் கைது
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்ஓசூரில் 35 பேர் கைது
ADDED : ஜன 31, 2025 01:11 AM
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்ஓசூரில் 35 பேர் கைது
ஓசூர்:திருப்பரங்குன்றம் மலையை, பெயர் மாற்றும் முயற்சியை கண்டித்து, ஓசூர், ராம்நகரில் நேற்று, அகில பாரத இந்து மகா சபா அமைப்பின், மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஷ் ஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்தும், திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டில் அமர்ந்து, பிரியாணி சாப்பிட்டு, மலையின் புனிதத்தை கெடுத்த, எம்.பி., நவாஸ் கனி மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம், மதவாதத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஷ் ஜி மற்றும் 34 பேரை, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

