/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரூரில் நெல் மூட்டைக்கு ரூ.400 சரிவு
/
அரூரில் நெல் மூட்டைக்கு ரூ.400 சரிவு
ADDED : ஜன 23, 2025 01:40 AM
அரூரில் நெல் மூட்டைக்கு ரூ.400 சரிவு
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, மாம்பட்டி, கீரைப்பட்டி, பறையப்-பட்டி, தாமலேரிப்பட்டி, வடுகப்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.
கடந்த சில வாரங்-களாக, நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில், மூட்டைக்கு, 400 ரூபாய் விலை சரிவடைந்தள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், முதல் போக நெல் சாகுபடி அறுவடை தற்போது தீவிரமாக நடக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன், அம்மன் என்ற தனியார் ரகத்தை சேர்ந்த, 77 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, 2,000 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து, இடைத்தரகர்கள் கொள்முதல் செய்தனர். இந்நிலையில் கடந்த, 2 வாரங்களாக மூட்டைக்கு, 400 ரூபாய் குறைந்து, தற்போது, 1,500 முதல், 1,600 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நெல்லுக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும் வகையில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அரூரில், அரசின் நேரடி கொள்முதல் நிலையம் துவங்க, மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

