/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழாவில் 450 காளைகள் பங்கேற்பு
/
எருது விடும் விழாவில் 450 காளைகள் பங்கேற்பு
ADDED : மார் 10, 2025 01:25 AM
எருது விடும் விழாவில் 450 காளைகள் பங்கேற்பு
தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டை அருகே நடந்த எருது விடும் விழாவில், 450 காளைகள் சீறிப்பாய்ந்தன. அதை பிடிக்க முயன்ற, 37 பேர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்க்கத்தில் உள்ள, பிரம்மராம்பா தேவி உடனுறை சிடில மல்லிகார்ஜூன சுவாமி கோவில் தேர்த்திருவிழா மற்றும் பல்லக்கு உற்சவ விழா மூன்று நாட்கள் நடந்தன. கடைசி நாளான நேற்று காலை எருது விடும் விழா நடந்தது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் கர்நாடகா மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 450 காளைகள் பங்கேற்றன. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், விழாவை துவக்கி வைத்தார். விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர். இதில், 37 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10,000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால், தேன்கனிக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.